
அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாகூர்பிச்சை (வயது -50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் இன்று காலை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள றாணமடு 10ஆம் கொலனி சந்தியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் நெஞ்சுப்பகுதியில் மூன்று கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும், சடலத்தின் கால் பகுதியை முதலை கடித்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக