
நோர்வேயில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியான விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நோர்வே இதற்கு அனுமதி வழங்கியது குறித்து சிறிலங்கா அரசு தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துரையிடுக