
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இரவு கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பார்த்தவர்கள்.
கள்ளசாராயத்தை குடித்தவுடன் அவர்களுக்கு பயங்கரமான நெஞ்சு வலியும் கண் வலியும் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்து நாட்டு சாராயத்தில் கலக்கப்பட்டிருந்தது தான் இதற்கு காரணம் என்று மாவட்ட ஆட்சியர் கிரிஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துரையிடுக