
ஜப்பானில் கடந்த சில வாரங்களாக ஏற்படும் நிலநடுக்கங்களினால் அந்நாட்டு மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஜப்பானின் மேற்குப்பகுதியில் நேற்று நள்ளிரவு 11.04 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் நராஹா, தொமி யோகோ நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கி அதிர்ந்தன. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வீதியை நோக்கி ஓடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அரசு அறிவிக்கவில்லை.
இச்சம்பவத்தினால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளான புகுஷிமா மற்றும் நாய்னி அணுஉலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக