
லிபிய நாட்டுத் தலைவர் கடாபியைப்போல என்னை வீதியில் இழுத்துச் சென்று கொல்லுவதற்கு எனது நாட்டு மக்கள் விடமாட்டார்கள் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் அவ்வாறானதொரு நிலைக்கு தள்ளவே ஏகாதிபத்திவாதிகள் முனைவதாகவும் ஜனாபதி குற்றம் சாட்டியுள்ளார்.
லிபிய நாட்டில் வெடித்த இராணுவப் புரட்சியின் காரணமாக லிபிய அதிபர் கேணல் கடாபி வீதியில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கொன்று பழிவாங்கியதைப்போல தன்னை கொல்லுவதற்கு இலங்கை மக்கள் ஒரு பொழுதும் விடமாட்டார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டியில் போகம்பரை நடைபெற்ற ஒன்றிணைந்த நாடு என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏகாதிபத்தியவாதிகள் பல நூற்றுக்கணக்கான வருடங்களாக இலங்கையை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தையும் வளமான வாழ்வையும் ஸ்திர நிலையையும் ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கருத்துரையிடுக