News Update :
Home » » மகிந்தவுக்குச் சர்வதேச தண்டனை

மகிந்தவுக்குச் சர்வதேச தண்டனை

Penulis : Antony on செவ்வாய், 10 ஏப்ரல், 2012 | AM 5:59

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து அகற்றினால் அவருக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை சுலபம் என கனேடிய தமிழ் அரசியல் அவதானிகள் குழு தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும் எனவும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவ்வாறு ஜனாதிபதி மகிந்தவுக்கு தண்டனை வழங்க வேண்டுமாயின் அவரைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். இதற்கு பலமான அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஜனாதிபதி மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதும் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே அதற்குரிய வேலைத்திட்டங்களில் இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு கனடாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் அவதானிகள் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் தற்போதைய அவசரத் தேவை என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்ட மேற்படி விடயம் தற்போது அறிக்கையான வெளிவந்துள்ளது. மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஜனாதிபதி மகிந்தவும் அவரது சகாக்களும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்றழித்தவர்கள் என்பதை உலகமே அறியும். அத்துடன் இன்றும் இன்னமும் அந்த நாட்டில் கடத்தல்களும், கொலைகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறான அடக்குமுறையும் அட்டகாசமும் நிறைந்த மகிந்தவின் ஆட்சியை நீடிப்பது என்பது இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும். இலங்கையில் தொடர்ந்தும் மகிந்தவின் ஆட்சியில் அவரது சகோதரர் கோத்தபாய ஒரு சர்வதிகாரியாகவே செயற்பட்டு வருகின்றார். அங்கு அரசியல் நியாயம் கேட்கும் பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள் அல்லது கொன்றழிக்கப்படுகின்றார்கள். எனவே மகிந்த ராஜபக்சவை ஆட்சியை விட்டு அகற்றவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் உடனடியாக ஈடுபட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger