மாற்றுக்கொள்கை கொண்டோரை கடத்துவது மனிதாபிமானமற்ற செயல்
Penulis : ۞உழவன்۞ on திங்கள், 16 ஏப்ரல், 2012 | 1:51 AM
அரசியல் ரீதியாக மாற்றுக் கொள்கைகளை கொண்டிருப்போரை கடத்துவதும், காணாமல் போகச் செய்வதும் மனிதத்துவத்தின் மாட்சிமையை சிதைக்கும் மனிதாபிமானமற்ற செயலாகுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், இத்தேபான தர்மா லங்கார தேரரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற ச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர கடத்திக் கொலை செய்வதை அனுமதிக்க முடியாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், இத்தேபான தர்மாலங்கார தேரரும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1970ஆம் ஆண்டு தசாப்த காலத்தில் பல்வேறு அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அடிப்படைவாத ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டோர் தத்தமது கொள்øககளுடன் முரண்பட்ரோரை கடத்தியும் கொலை செய்தும் பகிரங்கமாக சடலங்களை பார்வைக்கு வைத்து அட்டகாசங்களை புரிந்தனர்.
198090 காலங்களிலும் இந்நிலைமை மேலும் அதிகரித்தது.
அரசியல்வாதிகள், பாதாள உலகக் கோஷ்டிகளுக்கிடையே முரண்பாடு கொண்டவர்கள் கடத்தப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள்.
சிங்கள, தமிழ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளும் இதற்குள் அடங்கும்.
இவை தொடர்பாக பகிரங்கமான விசாரணைகள் நடத்தப்படவில்லையென்பது இரகசியமான விடயமாகும்.
எனவே நாட்டின் பொதுவான சட்டத்திற்கு எதிராக எவராவது செயற்படுவாரென்றால் நாட்டிலுள்ள சட்டத்தின் அடிபடையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. இதனை நியாயப்படுத்தும் துர்ப்பாக்கியமான சூழ்நிலையே காணப்படுகிறது.
எந்தவொரு மதத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நியாயப்படுத்தப்படவில்லை.
மதங்களின் சித்தாந்தங்களுக்கு முரணானது.
எனவே கடத்தல்கள், காணாமல் போதல், கொலைகளை நிறுத்த பொறுப்புடையவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் அக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக