
காணாமல்போனோர்களை இறந்தவர்கள் என்று கருதி அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் திட்டத்தை வடக்கு மக்கள் புறக்கணித்துள்ளனர்.வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களோ, எண்ணிக்கையோ உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளைகளை மரணித்தவர்கள் எனக் கூறி மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முன்வரவில்லை. காணமல்போன தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தலைவர்கள் திரும்புவரென்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அதேவேளை, தமது உறவுகள் வீடு திரும்புவர்கள் என்ற நம்பிக்கையை இழந்து, 40 குடும்பங்கள் மட்டுமே இதுவரை மரணசான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக