News Update :
Home » » ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் டெல்லியில் பேரணி! (படங்கள்)

ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் டெல்லியில் பேரணி! (படங்கள்)

Penulis : ۞உழவன்۞ on வியாழன், 5 ஏப்ரல், 2012 | PM 1:42

டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defense International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு , தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி பேராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை நடத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்று இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர். டெல்லித் தமிழ் சங்கத்தலைவர் எம்.என்.கிருஸ்ணமணி மற்றும் Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் – சிறிலங்காவைப் புறக்கணி – சிறிலங்காவில் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற வாசகங்களைத் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில், தமிழர்களுக்கான நியாயமான தீ;ர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா, தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு நிறுத்தப்படவேண்டுமென கோரினார். இதேவேளை சிறிலங்கா தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டுமெனவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிபுரிய, அரச சார்பற்ற நிறுவனங்களை சுதந்திரமாக பணியாற்ற சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தூதரகம் நோக்கி பேரணியாக போரட்டம் முன்னெடுகப்பட்டிருந்த நிலையில், டெல்லிக் காவல்துறையினரால் பேரணி இடையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா அவர்கள், சிறிலங்காவின் தூதரகக்கு சென்று, தங்களது கோரிக்கை மனுவினைக் கையளித்து திரும்பியுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger