
நல்லிணக்க ஆணைக்குழு முன் அரச படைகளுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் எதிராக சாட்சியமளித்த தமிழ் மக்கள் சிலரை, எதிர்வரும் 7ஆம் திகதி, 4ஆம் மாடிக்கு விசாரணைக்காக வருமாறு அரச புலனாய்வுப் பிரிவினர், காவல்துறையினர் ஊடாக நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.
4ஆம் மாடிக்கு விசாரணைக்காக செல்வதற்கு தங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும் இந்த விசாரணையை தங்களது சொந்த இடங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து தரும்படியும் குறித்த அழைப்பாணையைப் பெற்றுக்கொண்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்ணம் பூங்கோதை என்ற யுவதி மனித உரிமை அமைப்பினூடாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக