
பெற்ற பிள்ளையை சட்டவிரோதமான முறையில் பணத்திற்கு விற்ற தாயும், பிள்ளையை விலை கொடுத்த வாங்கிய கணவன் - மனைவியும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஊர்காவற்துறைப் பொலிசாரும் சுன்னாகம் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டதுடன் சுமார் ஐந்து மாதப் பிள்ளையும் பொலிசாரினால் பொற்ப்பேற்கப்பட்டுள்ளது.
ஊர்சாவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த பிள்ளையை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் குடும்பத்தினருக்கு முப்பதாயிரம் ரூபாவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்துள்ளார்.
இது சம்பந்தமாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கடந்த திங்கட்கிழமை (11.03.2013) இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இன்று மூவரும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக