இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
மேலும் தீவிரவாதிகள் விமானங்களை கடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் இதற்காக நாட்டில் உள்ள சிறிய ஓடு தளங்களை அவர்கள் பயன்படுத்த உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது. தாக்குதல்களின் போது புதிய வகை வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களும் கண்காணிப்பை அதிகரித்துள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

home

Home
கருத்துரையிடுக