பிரபாகரனால் முடியாததை விக்னேஸ்வரன் மூலம் அடைய நினைக்கிறது கூட்டமைப்பு
Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 23 ஜூலை, 2013 | 5:41 AM
ஓய்வுபெற்ற பின்னர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரவேண்டிய தேவை என்ன என்று சிந்திக்க வேண்டிய தேவை வந்து விட்டது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்த கொழும்பிலுள்ள இரண்டு வெளிநாட்டுத் தூதரகங்கள் விரும்பின.
விக்னேஸ்வரன் அனைத்துலக ஆதரவு பெற்றவர் என்பதை இரா.சம்பந்தனே தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மூலம் அடைய முடியாது போனதை, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அடையப் பார்க்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏனைய அரச பணியாளர்களை விட அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் நடுநிலையாகவும், சுதந்திரமாகவும் செயற்படுவார்கள் என்று நாடு எதிர்பார்க்கிறது.
ஆனால் விக்னேஸ்வரன் ஓய்வுபெற்ற பின்னர், அரசியலுக்கு வருவது ஏன் என்ற ஆராயப்பட வேண்டியுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக