அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. நாளை கொழும்பில்
Penulis : ۞உழவன்۞ on புதன், 3 ஜூலை, 2013 | 5:33 AM
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் நாளை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் உயர்பீடம் ஒன்றை நிறுவுதல், அதன் கீழான தலைமைக்குழு, நிதிக்குழு, தேர்தல் குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு உள்ளிட்ட நிர்வாக பொறிமுறையை ஏற்படுத்தி, இறுதி முடிவை வரையறை செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியான ஒரு சக்தி மிக்க ஸ்தாபனமாக மாற்றி அமைப்பது தொடர்பிலும், வடமாகாண சபை தேர்தலில் யாரை முதன்மை வேட்பாளராக நியமிப்பது மற்றும் வட மாகாண சபை தேர்தலை வெற்றி கொள்வதற்கான உபாயங்களை வகுப்பது உள்ளிட்ட இலக்குகளை அடையும் ஒரு விசேட கலந்துரையாடலாகவே நாளைய கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
- நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கிறது அமெரிக்கா – கோத்தா ஆவேசம்
- யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம்! TNA தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் கோஷம்..
- மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
- ஆடைகள் களையப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு
- அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான சி.ஐ.எ இலங்கைக்கு திடீர் விஜயம்
- தமிழர்களை சிறிலங்காவுக்கு அனுப்புவதை இடைநிறுத்தியது சுவிஸ்
- அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. நாளை கொழும்பில்
- ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக