News Update :
Home » » ஐ.நா அமர்வில் தமிழரின் மனித உரிமை அறிக்கை

ஐ.நா அமர்வில் தமிழரின் மனித உரிமை அறிக்கை

Penulis : Antony on செவ்வாய், 22 செப்டம்பர், 2009 | பிற்பகல் 3:40


தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டுவரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 12வது கூட்டத் தொடருக்கு பிரான்சை தளமாக கொண்டு கடந்த இருபது வருடங்களாக சர்வதேச ரீதியாக மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் மனிதாபிமான, மனித உரிமை நிலைகளுடன் இடம்பெயர்ந்தோர் பற்றிய புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டள்ளது. இவ் அறிக்கை தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரால் மனித உரிமைச் சபையில் பங்கு கொள்ளும் அங்கத்துவ நாடுகளுக்கும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும் முக்கிய புள்ளிகளுக்கும் விநியோகித்துள்ளனர்.
அம் மனுவில், கடந்த ஓகஸ்ட் மாதம் 25ம் திகதி பிரித்தானியா சனல்-4 தொலைக்காட்சி – சிறீலங்கா இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்ட தமிழர் எதுவித விசாரணைகளுமின்றி மிகக் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்படுவது ஒரு போர்க் குற்றமெனவும் அது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, வதைமுகங்கங்களில் மிருகங்கள் போல் அடைக்கப்பட்டு மோசமான அவலங்களை அனுபவிக்கும் மூன்று இலட்சம் தமிழ் மக்களை உடன் மீழ் குடியேற்றம் செய்வதற்கு சிறீலங்கா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரத்திற்கு மேலதிகமான போர் கைதிகள், பல இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இரவு பகலாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களில் பலர் தினமும் காணமல் போகின்றனார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடக சுதந்திரம் பற்றியும் இவ்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் மனிதர் உரிமை மையத்தின் அறிக்கையில், இலங்கையில் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 2004ம் ஆண்டு முதல் இன்றுவரை படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனுவில் சிறீலங்கா அரசின் ஊதுகுழல்கள் உண்மைக்கு மாறான பல கட்டுக்கதைகளையும் பொய்களையும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரப்பி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் ஊடக ஊழியரும்2004 ஏப்ரல்
முதல் – மார்ச் 2009 வரை
2004
1. ஐயாத்துரை அ. நடேசன் – பத்திரிகையாளார் – 31 மே
2. கந்தசாமி ஐயர் பாலேந்திரரா – எழுத்தாளர் – 16 ஆகஸ்ட்
3. லங்கா ஜெயசுந்தரா – புகைப்பட பத்திரிகையாளார் – 11 டிசம்பர்
2005
4. தர்மரட்ணம் சிவராம் – ஆசிரியர் – 28 ஏப்ரல்
5. கண்ணமுத்து அரசகுமார் – ஊடக ஊழியர் – 29 யூன்
6. றிலாஞ்சி செல்வராஜ் – பத்திரிகையாளார் – 12 ஆகஸ்ட்
7. டி.செல்வராட்னம் – ஊடக ஊழியர் – 29 ஆகஸ்ட்
8. யோககுமார் கிருஷ்ணபிள்ளை – ஊடக ஊழியர் – 30 செப்டம்பர்
9. எல்.எம்.பலில் (நெற்பிற்ரிமுனை) – எழுத்தாளர் – 02 டிசம்பர்
10. கே. நவரட்ணம் – ஊடக ஊழியர் – 22 டிசம்பர்
2006
11. சுப்ரமணியம் சுகிர்தராஐன் – பத்திரிகையாளார் – 24 ஐனவரி
12. எஸ்.ரி.கணநாதன் – பத்திரிகை உரிமையாளர் – 01 பெப்ரவரி
13. பஸ்ரியான் ஜென் சகயதாஸ் – ஊடக ஊழியர் – 03 மே
14. ராஐரட்ணம் ரஞ்சித் குமாரா – ஊடக ஊழியர் – 03 மே
15. சம்பத் லக்மல் டி சில்வா – பத்திரிகையாளார் – 02 யூலை
16. மரியதாசன் மனேஜன்ராஜ் – ஊடக ஊழியர் – 01 ஆகஸ்ட்
17. பத்மநாதன் விஸ்வநாதன் – பாடகர், இசைவாணர் – 02 ஆகஸ்ட்
18. சதாசிவம் பாஸ்கரன் – ஊடக ஊழியர் – 15 ஆகஸ்ட்
19. சின்னத்தம்பி சிவமகாராஜா – பத்திரிகை உரிமையாளர் -20 ஆகஸ்ட்2007
2007
20. எஸ். ராவீந்திரன் – ஊடக ஊழியர் – 12 பெப்ரவரி
21. சுப்ரமணியம் ராமச்சந்திரன் – ஊடகவியலாளர் – 15 பெப்ரவரி
22. சந்திரபோஸ் சுதாகர் – பத்திரிகையாளார் – 16 ஏப்ரல்
23. செல்வராஜா ரவிவர்மன் – பத்திரிகையாளார் – 29 ஏப்ரல்
24. சகாதேவன் நீலக்சன் – பத்திரிகையாளார் – 01 ஆகஸ்ட்
25. அந்தோனிப்பிள்ளை சிந்தராஞ்சன் – ஊடக ஊழியர் – 05 நவம்பர்
26. வடிவேல் நிர்மலராஜ் – ஊடக ஊழியர் – 17 நவம்பர்
27. இசைவிழி செம்பியன் (சுபாஜினி) – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
28. சுரேஸ் லிம்பியோ – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
29. ரி. தர்மலிங்கம் – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
2008
30. பரநிரூபசிங்கம் தேவகுமார் – பத்திரிகையாளார் – 28 மே
31. ரஸ்மி முகமட் – பத்திரிகையாளார் – 06 ஒக்டோபர்2009
32. லசந்தா விக்கிரமதுங்கா – ஆசிரியர் – 08 ஜனவரி
33. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி – பத்திரிகையாளார் – 12 பெப்ரவரி
34. சசி மதன் – ஊடக ஊழியர் – 06 மார்ச்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger