மாணவன் கீர்த்திவாசன் கடத்தல் வழக்கில், கைதான பொறியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்த அம்பத்தூர் கோர்ட் மேலும் ஐந்து நாட்கள் அனுமதியளித்துள்ளது. சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிரானைட் அதிபர் ரமேஷ் மகன் கீர்த்திவாசனை கடத்தியதாக விஜய், பிரபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டருந்த அவர்களை கடந்த 8ம் தேதி போலீஸ் காவலில் எடுத்து நான்கு நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்ததும், இன்று அம்பத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களது காவலை நீட்டிக்குமாறு போலீசார் மனு தாக்கல் செய்ததையடுத்து, மேலும் ஐந்து நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
home



Home
கருத்துரையிடுக