சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வுக்கு சீன அதிபர் சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி இரண்டாவது தடவை பதவியேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் சீன அதிபரின் சிறப்புத் தூதுவராக சங் குவெய் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ தெரிவித்தார்.
தேசிய மக்கள் சபையின் நிலையியல் குழுவின் உதவித் தலைவரான சங் குவெய் எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை சிறிலங்கா அதிபரின் சிறப்பு விருந்தினராக தங்கியிருப்பார்.
அதேவேளை எதிர்வரும் 18ம் திகதி சீன நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் திறப்பு விழாவிலும் சீன அதிபரின் சிறப்புத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்புத் தூதுவரை அனுப்புகிறார் சீன அதிபர்
Penulis : Antony on வியாழன், 11 நவம்பர், 2010 | 1:12 PM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக