விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை படைத்தரப்பு வெளியிட்டுள்ளது
Penulis : Antony on சனி, 13 நவம்பர், 2010 | 3:04 AM
தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இதுவரை 21 நீண்டதூர ஆட்லறிப் பீரங்கிகளும், சுமார் 800 பல்வேறு வகையான மோட்டார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு "ஐலன்ட்" நாளிதழ் தகவல் வெளியிடுகையில்,
புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் விபரம்:-
152 மி.மீ ரகத்தைச் சேர்ந்த ஆட்லறிப் பீரங்கிகள் ஆறு.
130 மீ.மீ ஆட்லறிகள் ஒன்பது,
122 மி.மீ ஆட்லறிகள் ஆறு.
85மி.மீ ஆட்லறிகள் இரண்டு. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார்கள்:-
120 மி.மீ மோட்டார்கள் 57,
82 மி.மீ மோட்டார்கள் 38,
81மி.மீ மோட் டார்கள் 147,
60மி.மீ மோட்டார் கள் 487,
கொமாண்டோ மோட்டார்கள் 65 ஆகியனவும் அடங்கியுள்ளன.
அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கிகள் மூன்று, பின்னுதைப்பற்ற பீரங்கிகள் 14 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான ஆட்லறிகளும் மோட்டார்களும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற் றப்பட்ட பெரும்பாலான கனரக ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன.
இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 21,
தெர்மோபெரிக் ஆயுதங்கள் 55,
40 மி.மீ கிரனேட் செலுத்திகள் 253,
ஏவுகணை செலுத்திகள் 14,
23மி.மீ பீரங்கிகள் 07,
12.7மி.மீ கனரகத் துப்பாக்கிகள் 96,
பல நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் 273,
ரி 56 துப்பாக்கிகள் 14,232,
ஏ.கே 47 துப்பாக்கிகள் 103,
எம் 16 துப்பாக்கிகள் 63,
குறிபார்த் துச் _டும் சினப்பர் துப்பாக்கிகள் 34,
9மி.மீ கைத்துப்பாக்கிகள் 441,
மைக்ரோ கைத்துப்பாக்கிகள் 167,
14.5மி.மீ இடம் நகர்த்தக் கூடிய விமான எதிர்ப்புத் துப்பாக்கி கள் 25,
விமான எதிர்ப்பு ஏவுகணை கள் 08,
ரி55 பிரதான மர் டாங்கி கள் 02,
152மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள் 3964,
விமானக்குண்டுகள் 1143, கிளை மோர் குண்டுகள் 7069,
கைக்குண்டு கள் 35,315,
வெடிக்க வைக்கும் கருவிகள் 61,788,
புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் 4517 ஆகியனவும் அடங்கியுள்ளன.
இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் 167 மைக்ரோ கைத்துப்பாக்கிகளுடன் கூடிய 377 தற்கொலைத் தாக்குதல் அங்கிகள்,
6265 கிலோ எடையுள்ள சி 4 வெடிமருந்து,
188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து,
3186 கிலோ ஜெலிக் நைற்,
40 தற்கொலை இடுப்புப் பட்டிகள் உள்ளிட்ட பல பொருள்களும் அடங்கியுள்ளன.
இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 21 துப்பாக்கிகளில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தன.
20 தற்கொலைத் தாக்குதல் படகுகள்,
13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள்,
228 வெளியிணைப்பு இயந்திரங்கள்,
11 இஸ்ரேலிய மினியுசி துப்பாக்கிகள் உள்ளிட்ட 279 வகையான பொருள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக