மீண்டும் ஆயுதப்போராட்டம் ஏற்படலாம்: யாழில் சி.வி.கே. சாட்சியம்
Penulis : Antony on சனி, 13 நவம்பர், 2010 | 3:29 AM
யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக்குழு முன் சி.வி.கே. சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள் இன்று மாலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்றன. இதன்போது பலரும் சாட்சியமளித்தனர். அத்துடன், அமெரிக்க தூதரக அதிகாரியும் பார்வையாளராக இருந்தார்
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன்கூல், பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் மாநகர ஆணையாளர் சி வி கே சிவஞானம் போன்றோர் சாட்சியமளித்தனர்.
இதன் போது கருத்துரைத்த ராஜன் கூல்,தாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டதும் பின்னர் அதற்கு எதிராக நடந்த விடயங்களையும் எடுத்துரைத்தார்
நோர்வே ஏற்பாட்டிலான பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பக்கசார்பான விடயங்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
பாலசுந்தரம்பிள்ளையும், சிற்றம்பலமும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை பற்றி பேசினர்
சி வி கே சிவஞானம் கருத்துரைக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டு;ம் ஒரு ஆயுதப்போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது எனக்குறிப்பிட்டார்
அடிப்படையான கட்டுமானப்பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிவை எட்டமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
உதயன் பத்திரிகையின் ஆசிரியர் கானமயில்நாதன் சாட்சியமளித்தார். அவர் கடந்த காலத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட ஊடகங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஆணைக்குழுவின் முன்னால் தெரிவித்தார்.
யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற சாட்சிய நிகழ்வை அடுத்து குருநகரில் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. அங்கு பலர் சாட்சியமளித்தனர்.
அனைவருமே தமது உறவுகள் காணாமல் போனமையும் கைதுசெய்யப்பட்டமையும் அதன் பின்னர் காணாமல் போனமையும் மற்றும் கடத்தப்பட்டமையும் குறித்த முறைப்பாடுகளை சாட்சியங்களாக தெரிவித்தனர்
இதேவேளை இன்றைய சாட்சிய நிகழ்வின் அமெரிக்க தூதரகத்தின் செயலக மட்ட அதிகாரி ஒருவரும் தூதரகத்தின் தமிழ் அதிகாரியான பத்மினியும் பார்வையாளர்களாக பங்கேற்றமை முக்கிய அம்சமாக இருந்தது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக