
சுவிட்சர்லாந்தில் 64 வயது பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அராகு கான்டனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஒருவரே இவ்வாறு தனது முதல் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.
இதன் மூலம் சுவிட்சர்லாந்தில் கூடிய வயதில் பிரசவித்த தாய் என்ற பெருமையை குறித்த பெண் பெற்றுக் கொண்டுள்ளார்.
தாயும் சேயும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கணவர் அறுபது வயதானவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
மற்றுமொரு நபரின் கரு முட்டையைப் பெற்றுக் கொண்டு குறித்த பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு
கருத்துரையிடுக