
குறித்த கொலைச் சம்பவத்தில் 53 வயதுடைய லோரன்ஸ் ஹேவகே பத்மலதா என்ற பெண்மணியே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அக்கொலை யை அப் பெண்மணியின் மகனே செய்துள்ளதாகவும், அவர் ஒரு மனநோயாளி எனவும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
நேற்று காலை குறித்த சந்தேகநபர் தனது தாயை கத்தியால் குத்திக் கொலைசெய்து விட்டு வீட்டுக்குத் தீ மூட்டியுள்ளதுடன், படகொன்றில் தப்பிச்சென்றுமுள்ளார்.
வெலிகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வெலிகமை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடிவருகின்றனர்.
கருத்துரையிடுக