
’’இலங்கைத்தீவில் தமிழினமும் சிங்கள இனமும் இருபெரும் தேசிய இனங்களாக வாழ்ந்து வந்தாலும் சிங்கள இனத்திற்கு மூத்த இனமாக வாழ்ந்து வருவது தமிழினம்தான் என்பது வரலாற்று உண்மையாகும். எனினும் ஆங்கிலேயன் ஆட்சிக்கு பிறகு சிங்ளவன் கைகளில் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டதனால் ஒட்டுமொத்த இலங்கைத் தீவையே சிங்கள நாடு என அறிவிக்கும் வகையில் சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
அதன் விளைவாக தமிழ்த்தேசிய இனம் தங்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்றும் தங்கள் அடர்த்தியாக வசிக்கும் வடக்கு-கிழக்கு பகுதிகளை தங்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் தங்களை தாங்களே ஆண்டுகொள்ள அரசுரிமை வேண்டுமென்றும் கடந்த 50 ஆண்டுகளாக அறவழியினும் ஆயுதவழியிலும் போராடி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழக்கவும், லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாய் புலம் பெயரவும் வேண்டிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் சிங்கள இனவெறியன் ராஜபக்சே தமிழ் தேசிய கீதம் பாடுவதற்கு இலங்கைத் தீவில் அனுமதி இல்லை என்று அறிவிப்பு செய்திருப்பதோடு, சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், அதாவது இலங்கை சிங்களருக்கே உரியதாகவும் அறிவிப்புச் செய்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா என்ற கேள்வியை எழுப்பும் ராஜபக்சே, ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மையை மூடி மறைக்க முயல்கிறார். சிங்களப் பேரினவாதிகளின் இந்த மேலாதிக்க வெறியைக் கண்டிக்கவும், தமிழினத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைத் தடுக்கவும் இந்திய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
ராஜபக்சேவின் இனவாத பாசிசப்போக்குகளில் இருந்து தமிழனத்தையும் தமிழீழத்தையும் மீட்டெடுக்க தமிழ்நாட்டு தமிழர்கள் உள்ளிட்ட உலக தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட உறுதியேற்போம்’’என்று தெரிவித்துள்ளார்.
+ கருத்துகள் + 1 கருத்துகள்
நீயே ஒரு துரோகி நியெல்லாம் இதைப் பற்றி பேசவே கூடாதுடா
கருத்துரையிடுக