
இலங்கையில் இன்று காணப்பட்ட மர்ம விமானமொன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவிசாவளையை அண்மித்த பிரதேசத்திலேயே குறித்த விமானம் தென்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தின் கரண்தெனிய கொஹிலகெதர பிரதேசத்தில் மிகவும் தாழ்வாகப் பறந்த ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்க முற்படுவது போன்று தென்னை மர உயரத்துக்குத் தாழ்ந்து வந்துள்ளதை பிரதேச வாசிகள் பலரும் கண்டிருக்கின்றனர்.
அதன் பின் ஹெலிகொப்டர் திடீரென மேலெழுந்து பறந்துள்ளது. ஹெலிகொப்டர் விமானப்படையினரின் ஹெலிகொப்டரை ஒத்திருந்ததாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
பொலிசாரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிசார் விமானப்படையினருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.ஆயினும் தங்கள் விமானம் எதுவும் அந்தப் பிரதேசத்தில் பறப்பில் ஈடுபடவில்லை என்று விமானப்படையினர் மறுத்துள்ளனர்.
அதன் காரணமாக கரந்தெனிய பிரதேசத்தில் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதுடன், விமானப்படையும் மர்ம விமான விவகாரத்தில் அச்சத்தில் உறைந்துள்ளதாக கொழும்பிலிருந்து தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
home



Home
கருத்துரையிடுக