
உள்ளூர் கலாச்சாரத்துக்கு தீங்கானவை எனக் கருதப்படும் ஆடை வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பான விதிமுறைகளை வகுக்க ஒரு விஷேட குழு நியமிக்கப்படவுள்ளதாக கலாச்சார விவகார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு முதல் இந்தத் திட்டம் அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தின் இந்த முயற்சி தான் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்று நவநாகரிக ஆடை தொழில்துறையைச் சேர்ந்த ஒருவர் இதை விமர்சித்துள்ளார்.
அரை நிர்வாணம் எது என்பதற்கு அரசு முதலில் விளக்கமளிக்க வேண்டும். இதை எந்த அளவு கோல் கொண்டு நிர்ணயம் செய்யப் போகின்றார்கள் என்பதையும் அவர்கள் முதலில் விளக்க வேண்டும் என்று அநதப் பெண் மேலும் கூறினார்
கருத்துரையிடுக