
ஆரம்ப காலங்களில் மகாவம்சமானது விகாரைகளின் மரபுக்கேற்ப பௌத்த மதகுருக்களால் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வந்த அரசர்கள் அதன் பிற்சோ்க்கைகளை எழுதியிருந்தனர்.
ஆயினும் மிக நீண்ட காலமாக இலங்கையின் வரலாற்றுத் தொடர் விடுபட்டுப் போயுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னான அரசாங்கங்கள் மகாவம்சத்தின் வரலாற்றுத் தொடரை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதில் காட்டிய அசிரத்தையே அதற்கான காரணமாகும்.
இவ்வாறான நிலையில் தன்னையும் முன்னைய கால அரசர்களைப் போன்று கருதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகாவம்சத்தின் பிற்சோ்க்கையை இணைக்கத் தீர்மானித்துள்ளார்.
அதற்கென தற்போதைக்கு கலாசார அமைச்சின் கீழ் தனியானதொரு உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மகாவம்சத்தின் பிற்சோ்க்கை ஆவணப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துரையிடுக