
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம், மனைவி ஓம்சக்தியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ஓம்சக்தி தனது 2 குழந்தைகளுடன் அதே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் ஓம்சக்தி, சிப்காட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அவருக்கும், வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வேலு (30) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் இவர்க ளிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் ஆத்திரமடைந்த ஓம்சக்தி, காதலன் வேலுவை செங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வேலு, வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சிப்காட் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஓம்சக்தியை கைது செய்து வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
கருத்துரையிடுக