வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் மனங்களை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின்,புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடத்தி, தவறு செய்யாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஊவதென்னே சுமண தேரர் தெரிவித்துள்ளார்.சுமண தேரர் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், புலிகள் என குற்றம்சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ், சிங்கள, முஸ்லீம் என அனைவர் குறித்தும் விசாரணைகளை நடத்தி, குற்றம் புரியாதவர்கள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அரசாங்கம் இதனை மேற்கொள்ளுமாயின் உண்மையான சமாதானத்தை நாடும், மக்களும் உணர்வார்கள். இவ்வாறான நடவடிக்கை மூலம் மக்களிடம் காணப்படும் அச்சம் நீங்கும். சர்வதேச ரீதியாக அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை குறைக்க முடியும.
தற்காலிகமாக தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும் எதிர்காலத்தில் சிறை உள்ள கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் ஒரு வருடம் சிறையில் இருந்தால் சிறை கைதிகள் அனுபவிக்கும் துயரங்களை தாம் நேரில் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள சுமண தேரர், புலம்பெயர் தமிழர்களை இலங்கையுடன் இணைக்கும் பாரிய பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக