மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பரப்பில் கடந்த 15ஆம் திகதி சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட இரண்டு கடற்பண்டிகளை பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் கே.ஜீவரானி உத்தரவிட்டார்.வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்ட கடற்பண்டி என அழைக்கப்படும் அரிய வகை மீன் இரண்டினை பிடித்து உயிரிழந்த நிலையில் கடற்கரைக்கு கொண்டு வந்த போது மீனவர்களை மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.
மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக