
இது பற்றி தெரியவருவதாவது:
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 29.12.2010 ஆம் திகதி அன்று இரவு 8.00 மணியளவில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளி அனுமதிக்கப்பட்டு பின்பு இவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது.
அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலையில் ஒரு பிரியாவிடை பாட்டி நடைபெற்றதாம். இதனால் அம்புலன்ஸ் வாகன சாரதியும் அந்த பாட்டியில் மது அருந்திக்கொண்டிருந்தாராம். இதனால் தன்னால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வர முடியாதென கூறினாராம்.
இதனால் நோயாளியின் உறவினர்கள் மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் அவர்களை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல அரியநேத்திரன் அவர்கள் தனது வாகனத்தை அனுப்பி குறித்த நோயாளியை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்.
குறித்த இந்த விடயமாக பா.அரியநேத்திரன் அவர்களிடம் கருத்து கேட்டபோது மேற்படி சம்பவம் நடைபெற்றதை தான் உறுதிசெய்வதாகவும் அத்துடன், வைத்தியசாலையில் கடமை நேரத்தில் ஒரு அலுவலர் மது அருந்திவிட்டு தனது கடமையை செய்யமுடியாதென கூறுவதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் கூறினார்.
கருத்துரையிடுக