
வன்னி மக்கள் துர்மணம் படைத்தவர்கள். குளிக்க மாட்டார்கள். எப்போதாவது மழை வந்தால் தான் குளிப்பார்கள். இப்படி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பேசி இருக்கின்றார் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.
இதற்கு நேற்று அதே சபையில் கண்டனம் தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி பா. அரியநேத்திரன்.
தமிழ் மக்களின் நன்மையை உத்தேசித்து அரசை ஆதரிக்க கூட்டமைப்பு தீர்மானம் எடுத்திருக்கின்றது. அதற்காக கூட்டமைப்பை பலவீனமாக நினைக்க வேண்டாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இனவாதம் இன்றி நாகரிகமாக உரையாற்றுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழ் மக்களை நக்கல் அடித்து இச்சபையில் பேசினார் அமைச்சர் மேர்வின்.
இப்படிப் பேசினால் எப்படி நல்லாட்சியை ஏற்படுத்தலாம்? புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றது அரசு. ஒழிக்கப்பட்ட புலிகள் இயக்க்கத்தை பற்றி ஏன் அரசு பேசிக் கொண்டு இருக்க வேண்டும்? காலத்தை நீட்டாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண தயார் என்றால் அரசுடன் பேச கூட்டமைப்பும் தயார்.
கருத்துரையிடுக