
டர்பனில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 76 ஓட்டங்களையும், டுமினி 73 ஓட்டங்களையும், அமலா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர் கான், பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
290 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் ஒரு ஓட்டத்துடனும், டெண்டுல்கர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சர்மா 11 ஓட்டங்களுடனும், யுவராஜ் சிங் 2 ஓட்டங்களுடனும், டோனி 25 ஓட்டங்களுடனும், ரெய்னா 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் லோன்வபோ சொட்சோபே 4 விக்கட்டுகளை அதிரடியாக கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக லோன்வபோ சொட்சோபே தெரிவுசெய்யப்பட்டதோடு, 5 தொடர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.
அடுத்த ஒருநாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஜொகனஸ்பேர்கில் நடைபெற உள்ளது.
கருத்துரையிடுக