
இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் சிங்களம், ஆங்கில மொழிகளும் போதிக்கப்பட்டதால் இவர்கள் தமிழ்மொழியுடன் ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் பயிற்சியை முடித்து வெளியேறும் முக்கியத்துவமிக்க நிகழ்வில் பெற்றோரையும் கலந்து கொள்ளுமாறு திணைக்களம் அழைப்புகளை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் இளைஞர் யுவதிகளையும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கடந்த ஜூன் மாதம் யாழ். மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் பிரிவுகளிலுமிருந்து 302 பேர் நேர்முகப் பரீட்சை மூலம் பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு ஆறு மாத கால பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இவர்களில் அநேகமானோர் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் நியமனம் பெறவிருப்பதால் சகல பொலிஸ் நிலையங்களிலும் 24 மணி நேரமும் தமிழ் தெரிந்த பொலிஸாரின் சேவையை இனிவரும் காலத்தில் எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, வடக்கு கிழக்கில் மேலும் 2 ஆயிரம் தமிழர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெற்றிடமாகவுள்ள உப பொலிஸ் பரிசோதகர்கள், கான்ஸ்டபிள்கள், சாரதிகள் ஆகிய பதவிகளுக்காக ஆட்களை தெரிவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக