
தங்களுக்கெதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பூசா தடுப்பு முகாம் கைதிகள் அங்கு விஜயம் செய்திருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பூசா தடுப்பு முகாமில் தாம் மோசமாக நடாத்தப்படுவதாக எந்தவொரு கைதியும் முறைப்பாடு செய்திருக்காத அதே நேரம், தங்களுக்கெதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு ஒட்டுமொத்த குரலில் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
அங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர். அதிலும் முக்கியமான இலக்குகள் குறித்த புலனாய்வுத் தகவல்களைத் திரட்டிய புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் அவர்களில் உள்ளடங்குகின்றனர்.
அவர்களிற் பலர் வருடக்கணக்கில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அங்குள்ள தொண்ணூறு வீதமான கைதிகளுக்கு இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
அதனைச் சுட்டிக்காட்டிய அவர்கள் அரசாங்கம் வாக்களித்தபடி தமக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அங்குள்ள தடுப்புக் கைதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்பட இருபது பேரிடம் மாத்திரம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிந்து கொண்டு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
home



Home
கருத்துரையிடுக