
மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு பொலன்நறுவை ரயில் சேவைகளும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் ஏறாவூர் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்புக்குச் செல்லமுடியாததன் காரணமாக ஏறாவூரில் தரித்து நிற்பதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.துரைராஜா தெரிவித்தார்.
கருத்துரையிடுக