
மைனா படத்துக்கு பிறகு நடிகை அமலா பால்,'பட மழையில்' நனைகிறார்.
புது வருஷ கொண்டாட்டத்தில் பீச்சில் நட்பு வட்டாரத்தோடு பார்ட்டியில் கிக்காக கலக்கியுள்ளார்.
மதராசபட்டினம் படத்தின் இயக்குனர் விஜய் இயக்கும் படத்தில் பக்குவப்பட்ட பணக்காரப்பெண் ரோலில் நடிக்கிறேன். டைரக்டர் 'பசங்க' பாண்டிராஜின் இயக்கத்தில் வெறிகொண்டு சண்டை போடும் பெண்ணாக வருகிறேன்.
லிங்குசாமியின் வேட்டை படத்தில் ஆர்யாவோடு த்ரில் ரோலில் நடிக்கிறேன். பாணா காத்தாடி பட நாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக,காதல் கதையுள்ள படத்தில் ஸ்டைலிஸ் நாயகியாக ஜாலி பண்ணப்போறேன்.
டேட்ஸ் ஒதுக்க முடியாமல் போனதால் சூர்யா நடிக்கும் 'ஏழாம் அறிவு' படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
டைரக்டர் முருகதாஸிடம் இதை எடுத்து கூறினேன். எப்படியும் என்னோட அடுத்த படத்தில் நீங்க நடிப்பீங்க என்று ஆறுதல் கூறினார்.
டைரக்டர் விஜய், நடிகர் விக்ரம் இருவரையும் என் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இணைத்துள்ளேன். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே அலாதியான அனுபவம்தானே..! என்கிறார் அமலா.
கருத்துரையிடுக