
யாழ்.நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையமொன்று இன்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இன்று இரவு சுமார் 8.45 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தின் கொட்டகைகளுக்குள்ளிருந்து தீ பரவியதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தை பார்வையிட்டபோதே தீயிடப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் அதற்குள் தீ கொட்டகை மீது பரவி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து யாழ்.மாநகர தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுமார் 9.30 மணியளவில் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இச்சம்பவம் விஷமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் தீ பரவியதை கண்டறிந்திராவிட்டால் தீ முழுவதுமாக பரவியிருக்கும். அதனோடு நகரப்பகுதியென்பதால் குடிமனைகளும் இப்பகுதியில் மிக நெருக்கமாக காணப்படுகின்றது.
இதனால் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். தற்போது விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் சம்பவம் நடந்த இடத்தை யாழ். நீதவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.
கருத்துரையிடுக