
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் மாதகல் மற்றும் தீவுப்பகுதி உட்பட வடபகுதி கடற்பரப்புக்குள் நுழைந்து மீனவர்களின் வலைகளை வெட்டிச் செல்வதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதால் பவளப்பாறைகள் சேதமடைவதுடன் மீனினமும் அழிந்து வருவதால் வடபகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு உட்பட தீவுப்பகுதிகளிலும் மீனினம் அழிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் மட்டுமே தொழில் செய்ய முடியுமென இந்திய அரசாங்கம் மீனவர்களுக்கு அறிவித்திருந்தபோதும், அவர்கள் அதனை மீறி இரண்டு நாட்கள் கடலுக்குள் தங்கியிருந்து தொழில் செய்வதனால் யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
யாழ் மீனவர்கள் இரவில் கடலில் தங்கித் தொழில் செய்துகொண்டிருக்கும் போது தமது வள்ளங்களில் விளக்கு கொளுத்தி வைத்திருக்கும்போதும், அதைப் பொருட்படுத்தாமல் படகுகளைச் சேதப்படுத்திவிட்டு செல்வதுடன், யாழ் மாவட்ட மீனவர்களின் வலைகளை தமது றோலர் படகுமூலம் இழுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
கருத்துரையிடுக