மன்னாரில் நேற்று மாலை 6.45 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். பேசாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான தர்மா, கருசல் பகுதியைச் சேர்ந்த ஜலீஸ், தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த கமல் மற்றும் எழுத்தூர் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த தில்லை நாதன் ஆகியோரே தனித்தனியே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த 04 பேரையும் வெள்ளை வானில் கடத்திச்செல்லும் போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் வைத்து மக்கள் வாகனத்தை மறித்த போதும் அதில் இருந்த ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்து பின் தப்பிச்சென்றுள்ளனர்.
இறுதியாக மன்னார் நுழைவாயில் பகுதியில் மக்களினால் வெள்ளை வான் இடைமறிக்கப்பட்ட போதும் இடைமறிப்பு பயனளிக்கவில்லை எனவும் அவ்விடத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இராணுவம், பொலிஸ்,கடற்படையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
home



Home
கருத்துரையிடுக