
தாண்டிக்குளத்துக்கும் கொழும்புக்கும் இடையில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி புகையிரதம் இந்த மாதம் முதல் ஓமந்தை வரையான தமது பயணத்தை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ரெயில்வே திணைக்களத்தை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கான பாதை நிர்மாணப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 159 கிலோமீற்றர் ரெயில் பாதை மீள்புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த பாதையின் ஊடாக 16 பிரதான புகையிரத நிலையங்களும், 12 துணை நிலையங்களுடன், 85 பாலங்களும் உள்ளன. இந்தியாவின் புகையிரத பாதை நிர்மாண நிறுவனம் இந்த பாதையை புனரமைத்து வருகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், புதிய சமிஞ்கை முறைமை மற்றும் தொலைத்தொடர்பாடல் வலையமைப்பு முறைமை என்பனவும் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பயணப்பாதை நிர்மாணப்பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் இருந்து யாழ்தேவி புகையிரதம் ஓமந்தை வரையில் பயணிக்க கூடியதாக இருக்கும் என, புகையிரத திணைக்களத்தை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது
home



Home
கருத்துரையிடுக