
இந்திய - ஹாலிவுட் நடிகரான கபீர் பேடி 'அரவான்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
சர்வதேச அளவில் பெரிதும் புகழ்பெற்ற முதல் இந்திய நடிகரான கபீர் பேடி, 'அரவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
'அங்காடித் தெரு' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்கும் இப்படத்தின் கதை 18ஆம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், காதல் ஆகியவற்றை சொல்லும் படமாக உருவாகிறது.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் கபீர் பேடியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் கதையைக் கேட்ட கபீர் பேடி, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறுகிறது.
கருத்துரையிடுக