
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்வதற்கென நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளார். தடுப்புக் காவலில் இருக்கும் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பான விடயங்களை அவர்கள் சிபாரிசு செய்யவுள்ளனர்.
அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நாளை அவர்கள் பூசா தடுப்பு முகாமிற்கு விஜயம் செய்யவுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
பிரஸ்தாப நால்வர் குழுவின் தலைவராக பிரதி சட்டமா அதிபர் சவீந்திர பொ்ணான்டோ செயற்படவுள்ளார். சிரேஷ்ட அரச வழக்கறிஞர் குமாரத்னம், சேத்திய குணசேக்கர, தினால் இரத்நாயக்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
கருத்துரையிடுக