
அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கடத்தல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் வெற்றியீட்டுவதற்கு இந்த தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு பாரியளவு ஆதரவினை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெள்ளை வான் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் போன்ற பிரச்சினைகள் கிடையாது எனவும், அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு தமக்கு வாக்களித்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளான்று (2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி) நடைபெற்ற விருந்துபசார நிகழ்வுகளில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விருந்துபசார நிகழ்வுகளின்போது தலைவரின் பூரண ஆசீர்வாதத்துடன், ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தாம் வாக்குறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த குற்றத்திற்காக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்துவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக