வடக்கு கிழக்கில் கடமையாற்றி வரும் பாதுகாப்புப் படையினரை நெருக்கடியான நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும் நோக்கில் சூழ்ச்சித் திட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா தெரிவித்துள்ளார்.
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டதாக அண்மையில் இணைய ஊடகங்களில் வெளியான செய்தியும் இவ்வாறான ஓர் போலிப் பிரசாரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக