
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்து வருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்க முன்வரவோ தயாராக இல்லை என்பதாக சந்திரிக்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதற்காக தான் சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருந்தால் கூட நன்றாக இருக்கும் என்று அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த சந்திரிக்கா, இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு மஹிந்த போன்றோர் ஜனாதிபதியாக இருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று அவர் அண்மையில் கடுமையாகச் சாடியிருந்தார்.
அவ்வாறான நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே அதன் அழைப்பை அவர் புறக்கணித்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
home



Home
கருத்துரையிடுக