போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் பெரும்பாலான மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுகின்றன என்று அதிருப்தி வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் ஊடாக மேற்குலக நாடுகளின் மனதை மாற்றுவதே இப்போது எமக்குள்ள ஒரே வழியாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்களின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பது தொடர்பாக சிறிலங்காவின் தூதரகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மீள உயிர் பெறுவதற்கு முனையும் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து சிறிலங்கா அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்படும்.
விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்களும் வெடிபொருட்களும் கடந்த சில வாரங்களில் வடக்கில் படையினர் நடத்திய தேடதல்களின் போது மீட்கப்பட்டுள்ளன“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக