படுகொலைக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த பெரும்பான்மை இன இளைஞன் ஒருவர் இன்று இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரின் பெயர் எம்.கே.சஞ்சீவ சொய்ஷா. வயது-27.
இவர் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
காலி மாவட்டத்தில் இடம்பெற்ற படுகொலை ஒன்றுடன் இவருக்கு சம்பந்தம் உண்டு.
இவர் இலங்கைப் பணத்தில் ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்து தோணி மூலம் இராமேஸ்வரம் வந்து இருக்கின்றார்
home



Home
கருத்துரையிடுக