பிள்ளைகள் எவரும் பார்வையிட வராமையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரின் தாய் பார்வதி அம்மாள் மிகவும் மனம் உடைந்து போய் உள்ள்ளார் என்று யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார். இவர் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.
இவரது பேட்டி வருமாறு:-
" நீண்ட காலமாக பாரிசவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பார்வதி அம்மாளின் உடல் நைந்து கொண்டு இருக்கின்றது. அவர் மிகவும் மனம் உடைந்த நிலையில் உள்ளார்.
ஏனெனில் பிள்ளைகள் எவரும் வந்து பார்க்கவில்லை என்பது இவரின் மிகப் பெரிய மன வருத்தம்.
பேரப் பிள்ளைகள்கூட வந்து பார்க்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒடிந்து போய் உள்ளார். இதனால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இவரின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.”
home



Home
கருத்துரையிடுக