
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளே தொடர்புபட்டுள்ளனர் என்பதாக யாழ்.இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.யாழ்ப்பாண மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் தான் முயற்சித்து வருகின்றார்கள். அவர்கள் தான் இங்கு நடக்கும் குற்றச்செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கின்றார்கள்.
ஆயினும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவே பிரஸ்தாப குற்றச்செயல்களை பயன்படுத்துகின்றனர். அதனை மக்களில் ஒருசிலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இராணுவம்-பொதுமக்கள் இடையேயான நல்லுறவும் நல்லமுறையிலேயே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக