
இனி வரும் காலங்களில் சிறைக்கைதிகளை அவ்வப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் சுமார் முப்பதாயிரம் வரையிலான நபர்கள் சிறைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளாந்தம் பத்து இலட்சம் ரூபா வரையில் உணவுக்காக மட்டுமே செலவிடப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக மருத்துவ வசதிகள், மின்சாரம், தண்ணீர், சவர்க்காரம் என அதனையொத்த இன்னொரு தொகையும், அவர்களைக் கண்காணிக்கும் சிறைக்காவலர்களுக்குப் பெருந்தொகையொன்றைச் சம்பளமாகவும் வழங்க நோ்ந்துள்ளது.
அதன் காரணமாக இனி வரும் காலங்களில் சிறைக்கைதிகளைக் கொண்டு பயிரிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய அபிவிருத்தியில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்ட செயற்பாடு வீரவில சிறைச்சாலையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக