
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டா ண்ட், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவையே தி.மு.க., ஆட்சியை அகற்ற போதுமான ஆதாரம். தி.மு.க., அறிக்கையில் மிக்ஸி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் என்ன செய்வது?
விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. இருக்கிற நிலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் கொ டுக்கவில்லை.
நல்ல விளைச்சல் வந்துவிட்டால், நிலத்தை யாரும் விற்கமாட்டார்கள். தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனால், கிடைத்த விலைக்கு நில த்தை வாங்கலாம்.
வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அதிக லாபத்துக்கு விற்கலாம் என்று செயல்படுகின்றனர்.
"டிவி' கொடுத்தோம் என்று சொல்லுகிறார்கள். அதனால் என்ன நன்மை? ஜெயலலிதா, ஆடு தருவதாக அறிவித்துள்ளார். "டிவி ' குட்டி போடு மா? ஆடு குட்டிபோடுமா? அறிவுபூர்வமாக உணர்ந்து ஓட்டு போட வேண்டும்.
தி.மு.க., எம்.பி.,க்கள் தற்போது கூட்டணிக்காக ராஜினமா செய்வதாக அறிவித்தார்களே. இலங்கையில் தமிழ் பெண்களை கொடுமைப்படுத்தியதை தடுக்க ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
+ கருத்துகள் + 1 கருத்துகள்
// "டிவி ' குட்டி போடு மா? ஆடு குட்டிபோடுமா?//எளிய உண்மை. மீனைக் கொடுப்பதற்கும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம்.
கருத்துரையிடுக